ஆன்மிக களஞ்சியம்

சூரிய வழிபாடு பூஜை முறை

Published On 2024-01-13 12:30 GMT   |   Update On 2024-01-13 12:30 GMT
  • முதலில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
  • பாக்கு, பழம் படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

முதலில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

மஞ்சளில் விநாயகரைப் பிடித்து அதன் மேல் அருகம்புல்லை வைத்து, கைகளில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு,

''ஓம் ஹஸ்கராடாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ கணேச: ப்ரசோதயாத்'' என்றும்

''நல்லார் பழிப்பினெழிற் செம்பவளத்தை நாணநின்ற

பொல்லா முகத்தெங்கள் போதகமே புறமூன்றெரித்த

வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம்மகிழ

வல்லார் மனத்தன்றி மாட்டாளிருக்க மலர்த்திருவே

ஓம் விநாயகா போற்றி''

என்று சொல்லி மலர்களை சமர்ப்பித்து வெற்றிலை - பாக்கு, பழம் படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

அடுத்து, சூரிய பூஜை செய்ய வேண்டும்.

பூஜைக்குத் தேவையான தேங்காய், ஐந்து விதமான பழங்கள், வெண்பொங்கல், பதினாறு உளுந்து வடை, பாயசம், தூபம், நெய்தீபம், வெண்தாமரை, முல்லை, நந்தியாவட்டை, சிவப்பு தாமரை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, வெள்ளை நூல் சுற்றிய சிறுகுடம் ஒன்றை கலசமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

சுத்தமான தரையில் சூரிய கோலத்தைப் போட்டு அதன்மேல் கோதுமை பரப்பி அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும்.

ஏலக்காய், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, வெட்டிவேர் ஆகியவற்றை இடித்து கலச நீரில் போட வேண்டும்.

இப்போது, உடல்நலம் தேவைப்படுபவரை மணை ஒன்றில் கோலம் போட்டு, பூஜை செய்யுமிடத்தில் கிழக்குப் பக்கத்தைப் பார்த்தவாறு உட்கார வைக்க வேண்டும்.

பிறகு பூஜையைத் தொடங்கலாம்.

அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி,

''ஓம் நம: சூர்யமண்டலாதிபதியே.. மம சுக குடும்ப சர்வ வியாதி நிவாரணார்த்தம் மன வாக் சுத்த சித்யர்த்தம் சூர்ய பூஜாம் கரிஷ்யே''

என்று சொல்லி, கலசத்துக்கு ஐந்து உபசாரங்களை செய்ய வேண்டும்.

அப்போது கலசத்தின் மேல் சிறிது தீர்த்தம் விட வேண்டும். பிறகு,

'மி'''ஓம் சூர்யாய நம: ஸ்நானம் சமர்ப்பயாமி.

ஓம் அருணாய நம: ஸ்நானானந்தரம் ஆசமனம் சமர்ப்பயாமி.

ஓம் தினகராய நம: கந்தம் புஷ்பம் சமர்ப்பயாமி.

ஓம் பாஸ்கராய நம: வஸ்திரம் உபவீதம்

ஓம் அர்க்காய நம: புஷ்ப மாலாம் சமர்ப்பயா

என்று சொல்லி முடித்ததும் கீழே இருக்கிற முக்கியமான சூரிய தியானத்தைக் கை கூப்பியபடி சொல்ல வேண்டும்.

''சூர்யம் குங்கும ஸங்காசம் ஸர்வாபரண பூஷிதம்

துவினேத்ரம் சாருவதனம் ரக்த மால்யா நுலேபனம்

சதுர்புஜ சமோபேதம் பரிதச்சாம்புஜ த்வயம்

அபீதி வரதோ பேதம் ப்ரபா மண்டல மண்டிதம்

உபவீத ஸமாயுக்தம் உஷாப்ரத்யுஷ ஸேவிதம்''

இதை சொல்லி முடித்ததும் சூரியனைக் குறித்த பதினாறு தமிழ்ப் போற்றிகளை சொல்லி கலசத்தில் வெள்ளை நிற மலர்களைப் போட வேண்டும்.

Tags:    

Similar News