ஆன்மிக களஞ்சியம்
சுதர்சனனிடம் சிவனே பரம்பொருளென நிரூபிக்க சொன்ன வைணவர்கள்
- வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார்.
- தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார்.
தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவ லிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார்.
வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார்.
தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார்.
தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.
அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இவ்வூரிலுள்ள வரத ராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும்.
முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.