ஆன்மிக களஞ்சியம்
சுமங்கலி பெண்களுக்கான ஆடி செவ்வாய் விரதம்
- ஆடி, செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
- ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் ஒளவையார் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.
அதேபோன்று ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.
கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும்,
கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும், இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.
வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து
அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.
ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.