சுவாதி நட்சத்திரக்காரர்களின் சிறப்புத் திருக்கோவில்!
- சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.
- இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான விசேஷ திருக்கோவில்களில் தாத்திரீஸ்வரர் ஆலயம், சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.
சுவாதி நட்சத்திர நாளில் பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருக்கும்.
சிரசாசனம், குக்குடாசனம், புஜங்காசனம் போன்ற யோக நிலைகளுக்கு சுவாதி நட்சத்திர தினம் மிகவும் ஏற்றதாகும்.
சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.
அதேபோல் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து கண்ணாடி வளையல் சாற்றி, வளையல்களை கல்யாணமான சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், சிறிய காணிக்கை சேர்த்து தருவதன் மூலம், திருமணம் ஆக காலதாமதமாகும் ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.
பெரியோர்களின் விருப்ப மின்றி திருமணம் செய்தவர்கள் அவர்களின் ஆசி பெறும் பொருட்டு இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.
மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் ஒரு சிறிய அகல் விளக்கு தீபமும் பிரபஞ்ச அளவில் அபூர்வ ஜோதி சக்திகளை அளிக்க வல்லதாகும்.
எனவே சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் அடிக்கடி சென்று வழிபடவேண்டிய தலம் இந்த திருமணம் திருத்தலம்!
இத்தலத்து இறைவனையும் இறைவியையும் குபேரன் வலதுகால் கட்டை விரலில் மட்டும் நின்று பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து நாகலிங்க மலர்களால் பூஜித்து, நெல்லிச் சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.
பித்ருக்கள், தம் சந்ததியினர் உதவவேண்டியவர்களுக்கு உதவி செய்யாமல் விடுவதால் அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தை அடைகின்றனர்.
அதனால் பித்ருக்களும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் இந்த சித்துக்காடு தலத்தில் தீப வழிபாடு செய்து பிராயசித்தம் அடைவதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.
நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில் சுவாதி என்ற புனித சொல் அடங்கியிருக்கிறது.
சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் மூன்று பேரிடம் இருக்கும் பீஜாட்சர சக்திகள் சுவாதி என்னும் சொல்லில் நிறைந்திருக்கிறது.
அதனால் தான் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சிவன், விஷ்ணு இணைந்து அருள்பாலிக்கும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.