ஆன்மிக களஞ்சியம்

தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர்

Published On 2024-05-30 10:55 GMT   |   Update On 2024-05-30 10:55 GMT
  • அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
  • அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.

அவர் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.

அவர் ஜீவ சமாதி அடைந்ததற்கான உறுதியான தகவல்களும் இல்லை.

அதற்கு காரணம் அவர் உடல் அழியவில்லை.

அவர் கைலாய மலைக்கு சென்று ஜீவ சமாதி அடைந்ததாக பெரும்பாலான ஆய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவர் வாழ்ந்துள்ளார். பல சிவாலயங்களுக்கு சென்று தியானம் இருந்து திருப்பணிகள் செய்துள்ளார்.

ரோமரிஷி வைத்தியம் ஆயிரம், ரோமரிஷி சூத்திரம் ஆயிரம், ரோமரிஷி ஞானம் 50, ரோமரிஷி பெருநூல் 500, ரோமரிஷி காவியம் 500, ரோமரிஷி மூப்பு சூத்திரம் 30, ரோமரிஷி ஜோதிட விளக்கம் போன்று ஏராளமான நூல்களை எழுதி உள்ளார்.

அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.

கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்து அவர் செய்த அற்புதங்கள் இப்போதும் பேசப்படுகிறது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த ஆலயத்தில் அவர் தவம் செய்யும்போது தனது தாடியை தடவி தங்கத்தை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுப்பாராம்.

ஒரு தடவை அவர் தாடி வழியே தங்கம் வருவது நின்று போனது.

உடனே தாடியை மழித்து அகற்றி விட்டார்.

என்றாலும் ஈசனிடம் சரண் அடைய அவர் மனம் விரும்பியது.

Tags:    

Similar News