ஆன்மிக களஞ்சியம்

தைப்பூசத்தில் புதுநெல்லு!

Published On 2023-10-22 11:14 GMT   |   Update On 2023-10-22 11:14 GMT
  • கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
  • மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர்.

தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள்,

தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று,

கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,

மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.

அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து,

வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர்.

அந்த அரிசியுடன் வீட்டில் உள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.

ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

Tags:    

Similar News