தாமிரபரணி கரையில் லட்சுமி நரசிம்மர்
- தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
- லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.
தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார்.
வதம் முடிந்த பிறகும் கூட அவரின் கோபம் தணிந்தபாடில்லை.
லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.
அந்த சமயம் சிறுவனான பிரகாலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான்.
பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி அமர்ந்துக்கொண்டான்.
அவரின் முகத்தினை நோக்கி தனது கையை கொண்டு போய் வருடி விட்டான்.
வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டிக் கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. பகவான் தன் பழைய நிலைக்கு வந்தார்.
பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள், முனிவர்கள் ஏன் லட்சமிதேவியே அருகில் செல்ல முடிந்தது.
முத்தாலங்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சன்னதியில் லட்சுமி நரசிம்மர் உள்ளார்.
இதில் நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கேட்ட வரம் தரும் தெய்வமாக இங்கே அமர்ந்து உள்ளார்.
இந்த கோவிலை எப்போது வேண்டும்மென்றாலும் திறந்து பக்தர்களுக்கு காட்ட உள்ளூரில் குணவதியம்மன் கோவில் பூசாரி வீட்டில் சாவி உள்ளது.
ஆகவே இந்த ஊருக்கு சென்றால் உடனே சுவாமி தரிசனம் செய்து விடலாம்.
இந்த கோவிலுக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.
நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 16 வது கிலோ மீட்டரில் உள்ள செய்துங்கநல்லூரில் இறங்கினால்
அங்கிருந்து ஆட்டோ மூலம் 6 கிலோ மீட்டரில் உள்ள முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை அடையலாம்.