ஆன்மிக களஞ்சியம்

தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதை உணர்த்தும் விநாயகரின் மோதகம்

Published On 2024-06-28 11:04 GMT   |   Update On 2024-06-28 11:04 GMT
  • அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி.
  • இவரது அங்குசமோ மனம் என்ற யானையை கட்டிப்போடும் வல்லமை படைத்தது.

விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்கள் இருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார்.

பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும்.

புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்து களைத்து தன்னை சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பை போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார்.

அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையை கட்டிப்போடும் வல்லமை படைத்தது.

அதனால் தான் முகம் யானை வடிவில் இருக்கிறது.

பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப்போடுகிறார்.

ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது.

இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது.

உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை.

உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதை காட்டுகிறது.

Tags:    

Similar News