ஆன்மிக களஞ்சியம்

தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்யுங்கள்

Published On 2024-07-02 12:12 GMT   |   Update On 2024-07-02 12:12 GMT
  • அந்த தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் மனம் பக்குவத்துக்கு வரும்.
  • சமயச் சடங்குகளை அளவிட முடியாது. ஏராளம் உள்ளன.

ஆலயத்தில் நமக்கு தரும் தீர்த்தத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. துளசி மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகும்.

அதை உட்கொள்ளும்போது பக்தன் மங்கலம் பெறுகிறான்.

அறிவியல் ரீதியாகவும் துளசியில் எத்தனையோ மருத்துவ குணங்கள் இருப்பது தெரிந்ததுதான்.

அதுபோல ஆலயத்தில் நாம் தியானம் செய்து ஓம் மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திர அதிர்வலை உடலுக்கு புத்துணர்ச்சி தருவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

இறை வழிபாட்டின் ஒரு அங்கமாக நாம் விரதம் இருப்பதிலும் ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல ரகசியங்கள் புதைந்துள்ளன.

விரதம் மன உறுதியை வளர்த்து இறைவனுடன் இரண்டற கலக்க செய்வதை காட்டுகிறது.

அது போல கடவுள் எடுத்த அவதாரங்களிலும் தத்துவங்கள் அடங்கியுள்ளது.

உதாரணத்துக்கு நரசிம்ம அவதாரத்தை எடுத்துக் கொண்டால், "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்" என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

ஆலயத்துக்குள் நுழைந்ததும் விநாயகர் முன்பு நின்று கொண்டு, தலையில் குட்டி, தோப்புக் காரணம் போடுவதில் தொடங்கி, கடைசியில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வருவது வரை அனைத்திலும் தத்துவங்கள் உள்ளன.

அந்த தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் மனம் பக்குவத்துக்கு வரும்.

சமயச் சடங்குகளை அளவிட முடியாது. ஏராளம் உள்ளன.

சமயச் சடங்குகள் உதவியுடன் கடவுளை வழிபடும்போது மனம் பக்குவமாகி விடும். "இறைவனே... நீயே கதி" என்று சரண் அடைந்து விடுவோம்.

சமயச் சடங்குகளை செய்து பாருங்கள், இந்த உண்மை உங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக புரிந்து விடும்.

Tags:    

Similar News