ஆன்மிக களஞ்சியம்

தீய கதிர்வீச்சுக்களை விரட்டும் எண்ணெய் முழுக்கு

Published On 2023-09-22 12:42 GMT   |   Update On 2023-09-22 12:42 GMT
  • காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.
  • தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணெய் உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.

ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது.

இந்த சனிக்கிரகம் உடலுக்கு தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது.

அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது.

சனி கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன.

அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார்.

சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணெய்யில் ஊறிய உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது.

தீய கதிர்கள் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணெய் முழுக்கு.

இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது.

ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது.

அந்த கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணெய்யை (நல்லெண்ணெய் வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் குளிக்க வேண்டும்.

அதனால்தான் நமது முன்னோர்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் வைத்து குளிக்கும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர்.

Tags:    

Similar News