ஆன்மிக களஞ்சியம்

தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது ஏன்?

Published On 2024-07-02 11:17 GMT   |   Update On 2024-07-02 11:17 GMT
  • நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது.
  • அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.

முதலில் ஆலயங்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது ஏன் என்பதை பார்க்கலாம்.

நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.

இதை நமக்கு உணர்த்துவது தேங்காய்.

தேங்காயைச் சுற்றியுள்ள ஓடு அறிவை சூழ்ந்துள்ள ஆணவத்தை காட்டுகிறது.

அந்த தேங்காய் ஓட்டை இரண்டாக உடைத்து விட்டால் உள்ளே தேங்காயின் வெள்ளைப் பகுதியை காணலாம்.

அது கள்ளமற்ற நம் மனதை காட்டுகிறது.

தேங்காய் உடைக்கும் போது வெளியேறும் தண்ணீர் நம் மனதில் உள்ள பந்த பாசங்கள் விலகி ஓடுவதை உணர்த்துகிறது.

ஆணவம், பந்த பாசம் விலகி விட்டால் தேங்காய் வெள்ளைப் பகுதி போல நம் மனம் பிரகாசமாகி விடும்.

அது நம் அறிவை பளீரென பிரகாசிக்க செய்யும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நம் மனதில் உள்ள ஆணவம் நீங்க வேண்டும் என்பதையே தேங்காய் உடைப்பு பிரதிபலிக்கிறது.

தேங்காய்க்கு முக்கண் உண்டு.

நாம் கடவுளை பிரார்த்தனையும், தியானமும் செய்து வழிபாட்டால் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தை பெறலாம் என்பதை தேங்காயின் முக்கண் காட்டுகிறது.

Tags:    

Similar News