ஆன்மிக களஞ்சியம்

தென்னந்தோப்பினுள் தனிப்பொலிவுடன் திகழும் அன்னை

Published On 2024-04-08 10:37 GMT   |   Update On 2024-04-08 10:37 GMT
  • அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது.
  • அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார்.

அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன்.

அன்னையைக் கண்டு வழிபட்ட ஒரு கவிஞன்,

அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே!

இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக,

அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.

இங்ஙனம் அருள் பாலிக்கும் வகையில் சிறந்து விளங்குகின்ற அன்னை அகிலாண்டேசுவரி,

மிகப்பெரிய தனித் திருக்கோவிலில், அடர்ந்த தென்னந் தோப்பினுள் திருச் சந்நிதி கொண்டு தனிப் பொலிவுடன் திகழ்கின்றாள்.

அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது.

மும்மூர்த்திகளையும் தமது திருமேனியில் படைத்து, பிறகு அவர்களைத் தமது திருமேனியிலே ஒடுக்கி விடுகின்றார்.

சிவபெருமான் என்பதை ஏகபாத மூர்த்தி சிற்பம் உணர்த்துகின்றது.

அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார்.

அவருக்குத்தலைமேல் ஒரு முகமும் இரு காது புறமும் இரு முகங்களும், பின்புறமாக ஒரு முகமும் சேர்ந்து ஐந்து முகங்களுடன் காட்சி தருகின்றார்.

Tags:    

Similar News