- இது ராமாயண காலத்துக்கு சமமானதாகும்.
- இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் முக்கியமானவர்கள்.
திருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோவிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைத் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப் பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார்.
இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர்.
சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார்.
கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் முக்கியமானவர்கள்.
இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சில காலம் தங்குவதற்கு எண்ணி, திருக்கைலாயத்தில் இருந்து புறப்பட்டு தென் திசை நோக்கி வந்தார்.
வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சி நகரை அடைந்தார்.
அப்போது சுந்தரநாதன் என்ற பெயருடன் விளங்கிய இவர், தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். இது 8 ஆயிரம் வருடங்களுக்கு (கி.மு. 6000) முன்னர் ஆகும்.
இது ராமாயண காலத்துக்கு சமமானதாகும்.