ஆன்மிக களஞ்சியம்

திருபுவனம் சரபேஸ்வரர்

Published On 2024-05-06 11:48 GMT   |   Update On 2024-05-06 11:48 GMT
  • இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
  • முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

சரபேஸ்வரருக்கு கும்ப கோணத்திற்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.

திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும்.

இப் பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.

இது மட்டுமின்றி விவவனம், திரிபுரவனம், தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளன.

ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இக் கோவில் அமைந்துள்ளது. இதற்கு 3 முக்கிய வாசல்கள் இருக்கிறது.

அவைமட்டுமின்றி அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில் ஒன்றும், வட பகுதியில் ஒன்றும் ஆக 2 வாசல்கள் இருக்கின்றன.

முதல் கோபுரம் 7 நிலைகளுடனும், 2ம் கோபுரம் 3 நிலைகளுடனும் கூடிய வாசல்கள் அழகுபெற செய்கின்றன.

இக் கோவிலுக்கு 2 பிரகாரங்கள் இருக்கிறது.

அவற்றுள் முதல் திருச் சுற்றாலையில் திருச்சுற்று மாளிகை இருக்கிறது.

இம் முதல் திருச்சுற்றாலையில் நடுப்பகுதியில் நடுக்கந் தீர்த்த பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.

கர்ப்ப கிரகத்தின் விமானம் தஞ்சை ராஜராஜேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் இவைகளின் விமானங்களை ஒத்தது ஆகும்.

இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.

முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.

2ம் திருச்சுற்றாலையில் வசந்த மண்டபமும், யாக சாலையும் அமைந்திருக்கிறது.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகம்பகரேசுவர்.

தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.

திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும்.

Tags:    

Similar News