ஆன்மிக களஞ்சியம்
null

திருமகள் தவமிருந்து இறைவனை மணந்த சாரங்கபாணி திருக்கோவில்

Published On 2024-07-01 11:39 GMT   |   Update On 2024-07-02 10:42 GMT
உத்யோக சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலை. ஆராவமுதன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

சாரங்கபாணி கோவில் காவிரியாற்றின் தென் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.

கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை ராஜகோபுரம் உண்டு.

மூன்று பிரகாரங்களை உள்ளடக்கியது. மூலவர் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள்.

உத்யோக சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலை. ஆராவமுதன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

இத்தலத்தில் உள்ள இறைவன் சாரங்கம் என்னும் வில்லை ஏந்தி காட்சியளிப்பதால் சாரங்கபாணி என்று பெயர் பெற்றார்.

தாயார் கோமளவல்லித் தாயார். புஷ்கரணி, ஹேமபுஷ்கரணி, மற்றொரு பெயர் பொற்றாமரைக்குளம். விமானம் வைதீக விமானம்.

குளத்திற்கு வடக்கே ஹேமமுனிவர் சன்னதி உண்டு.

வசந்தமண்டபம், 100 கால் மண்டபம் இந்த கோவிலுக்கு தனிச்சிறப்பு.

ஹேமமுனிவரின் மகளாகத் தோன்றிய திருமகள், இத்தலத்தில் தவம்புரிந்து கோமளவல்லி என்ற பெயர் கொண்டு இத்தல இறைவனை மணந்ததாக ஐதீகம்.

உபய பிரதான திவ்விய சேத்திரமான இத்தலத்தில் மூலவருக்கு என்ன சிறப்பு செய்யப்படுகிறதோ, அதே சிறப்பு உற்சவ மூர்த்திக்கும் செய்யப்படுகிறது.

கோமளவல்லி தாயார் இதுவரை கோவிலை விட்டு வெளியே வந்ததில்லை.

எனவே தாயாருக்கு படிதாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு.

உத்ராயண புண்ணிய காலத்தில் அதற்குரிய உத்ராயண வாசல் வழியாகவும், தட்சிணாயண காலத்தில் தட்சிணாயண வாசல் வழியாகவும் சென்றுதான் பகவானைத் தரிசிக்க வேண்டும்.

சுவாமியின் கருவறையே தேர் வடிவில் பிரமாண்டமான சக்கரங்களைக் கொண்டு மிக நுண்ணிய கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.

சோழ நாட்டு 40 திவ்ய தேசங்களில் இத்தலம் 14-வதாக போற்றப்படுகிறது.

இப்பெருமாளுக்கு "ஆராவமுதன்" என்று ஸ்ரீமந் நாத முனிகள் திருப்பெயர் சூட்டியிருக்கிறார்.

ஸ்ரீஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்¢கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களா சாசனம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News