- சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
- இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.
பொதுவாக திருமால் தமிழகம் முழுவதும் மூன்று விதமான கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஒன்று நின்ற கோலம், 2வது சயன கோலம், 3வது அமர்ந்த கோலம்.
அவர் எடுத்த அவதாரங்கள் கணக்கிட இயலாதவை.
அதனால் 25வது அவதாரங்கள் முக்கியமானவை என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
அதிலும் தசாவதாரம் மட்டுமே தற்போது நடைமுறையில் பேசப்படுவதாக உள்ளது.
அதிகம் தேடிச்சென்று வழிபடக் கூடியவையாகவும் அவை இருக்கின்றன.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்று 10 அவதாரங்களை பெருமாளின் தசாவதாரமாக சொல்கிறார்கள்.
இந்த 10 அவதாரங்களும் நிகழ்ந்த தலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.
இந்த அவதாரங்களுடன் தொடர்புடைய தலங்களும் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றன.
இந்த தலங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் மிக சிறப்பானதாக கருத்து உண்டு.
அப்படி மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த 108 திவ்யதேசங்களில் திருமால் 67 ஆலயங்களில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
சயன கோலத்தில் 24 தலங்களிலும், அமர்ந்த கோலத்தில் 17 தலங்களிலும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
சயன கோலத்தில் காட்சி அளிக்கும் 24 தலங்களில் அவர் கிழக்கு முகமாக 18 தலங்களில் உள்ளார்.
மேற்கு முகமாக 3 தலங்களிலும், வடக்கு முகமாக 3 தலங்களிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.
இங்கு ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.
இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.