ஆன்மிக களஞ்சியம்

திருமண வரம் அருளும் சீதா ராமேஸ்வரம் - நோய் தீர்க்கும் திருராமேஸ்வரம்

Published On 2024-05-20 11:21 GMT   |   Update On 2024-05-20 11:21 GMT
  • ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை கடல் மணலில் சீதை பிடித்து வைத்தது.
  • ஆனால் திருராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம், தானாக வளர்ந்த சுயம்பு லிங்கமாகும்.

மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில், தட்டாங்கோவில் என்ற ஊரில் இருந்து வடகிழக்கில் 2 கி.மீ. தொலைவில் திருராமேஸ்வரம் இருக்கிறது.

இங்கு சீதை பத்துமாதம் சிவ பூஜை செய்ததால் "சீதா ராமேஸ்வரம்" என்றும் அழைக்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் உள்ள சிவனை கடல் மணலில் சீதை பிடித்து வைத்தது.

ஆனால் திருராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம், தானாக வளர்ந்த சுயம்பு லிங்கமாகும்.

ராமேஸ்வரத்தில் 21 தீர்த்தங்களும் தனித்தனியே உள்ளன.

ஆனால் திருராமேஸ்வரம் திருக்குளத்தில் 21 தீர்த்தங்களும் சேர்ந்தள்ளன.

இக்கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று இரு துர்க்கை அம்மன்கள் இருக்கிறார்கள்.

விஷ்ணு துர்க்கைக்கும், சிவ துர்க்கைக்கும் ஒரே ஒருமுறை ராகுகால பூஜை செய்தால் போதும், திருமணம், குழந்தை செல்வம், பொருட்செல்வம் அனைத்தும் பெறலாம் என்கிறார்கள்.

எல்லாக் கோவில்களிலும் குருபகவான், நான்கு ரிஷிகளுடன் இருப்பார்கள்.

ஆனால் திரு ராமேஸ்வரம் கோவிலில் குருபகவான் எட்டு ரிஷிகளுடன் காட்சி தருகிறார்.

ஏழு அமாவாசை தினங்களில் அதிகாலையில் தீர்த்தக் குளத்தில் முழுக்குப் போட்டு சிவதரிசனம் செய்தால் அனைத்து நோய்களும் நீங்கப்பெறும் என்பது ஐதீகம்.

மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையில் 7 கிலோ மீட்டர் சென்று தட்டாங்கோவில் நிறுத்தத்தில் இறங்கி திருராமேஸ்வரம் செல்ல வேண்டும்.

Tags:    

Similar News

கருட வசனம்