- கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.
- மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.
திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.
பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும் வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு.
அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டும்.
அன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம்.
இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் வள்ளியை மணந்துள்ளார். அது மட்டுமா சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் விளங்குகிறது.
சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில் தான்.
கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான்.
மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.
இப்படி பங்குனி உத்திரத்தை நாளின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம்.