ஆன்மிக களஞ்சியம்

திருமணம் புத்திர பாக்கியம் என சகல செல்வங்களும் பெற....

Published On 2024-04-29 11:20 GMT   |   Update On 2024-04-29 11:20 GMT
  • இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.
  • அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்!

வரலட்சுமி விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சவுபாக்கி யங்களையும் பெற்றனர்.

ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.

அருகம் புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் "நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்" என்பது சான்றோர் வாக்கு!

கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும்.

கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும்.

மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும்.

உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும்.

அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்!

அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.

இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும்.

நல்ல ஆரோக் கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

Tags:    

Similar News