ஆன்மிக களஞ்சியம்

திரும்பிய திசையெல்லாம் நாய்கள்!

Published On 2024-06-02 11:45 GMT   |   Update On 2024-06-02 11:45 GMT
  • அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.
  • பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.

காலபைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் வேதங்கள் நான்காகக் கூறியுள்ளனர்.

எப்போதும் இறைவனோடு சேர்ந்தே இருப்பவை வேதங்கள் என்பதை உணர்த்தவே இவர் கொண்ட கோலம் கால பைரவ மூர்த்தி கோலமாகும்.

பைரவமூர்த்தியோடு நாய் இருப்பதற்கு மேலும் சில காரணங்களைக் கூறுவது வழக்கத்தில் உள்ளது.

அவை, காவலுக்குத் துணை புரியும் நாய் காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூக்கும புத்தி கொண்டது. குறிப்பாக எந்த உயிரையும் எடுக்க காலன் வருவது, கண்களுக்குத் தெரியாத தீய சக்திகள் வருவது போன்றவற்றைக் கண்டு அவற்றை தெரிவிக்கும் தன்மை நாய்க்கு உண்டு என்றும் சொல்வார்கள்.

அஷ்டமி திதி நாட்களிலும் சனிக் கிழமைகளிலும் பைரவரை முறைப்படி அர்ச்சித்து வழிபட்டால் சனி தோஷங்களும் சகலவிதமான தோஷ்ங்களும் நீங்கும்.

ராமகிரி தலத்தின் பிரதான மூர்த்தி காலபைரவர் என்பதால் என்னவோ அந்த கோவிலின் அனைத்து பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எங்கு பார்த்தாலும் நாய்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.

பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.

Tags:    

Similar News