- ருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன.
- பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
திருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன. இதுபற்றி ஆலய குருக்கள் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் கூறியதாவது:
1. முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும். புனித நீராடி முடித்ததும், துணிகளை நளதீர்த்தத்தில் எக்காரணம் கொண்டு போடக்கூடாது. தீர்த்தத்துக்கு வெளியில் கரையில்தான் போட வேண்டும்.
2. நள தீர்த்தத்தில் நீராடி முடித்ததும் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.
3. பின்னர் ஆலயத்துக்கு வந்து மூலவரான தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிகளை வழிபட வேண்டும்.
4. இதையடுத்து கோவிலை வலம்வந்து வழிபட வேண்டும்.
5. பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
6. இறுதியில் அருகில் உள்ள பிரணாம்பிகா அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும்.
7. வெளியில் வந்து கொடிமரம் அருகில் விழுந்து வணங்க வேண்டும்.
8. ஆலயத்தின் வெளி பிரகாரத்தில் திலதீபம் ஏற்ற வேண்டும்.
9. முடிவில் ஆலயத்தில் சிறிதுநேரம் அமர்ந்து செல்ல வேண்டும்.
10. இயன்ற தானதர்மங்கள் செய்வது மிகவும் நல்லது.