ஆன்மிக களஞ்சியம்
- திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
- தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.
திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
இது தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.
முருகப் பெருமான் தேர்களின் துயரம் நீங்கும்பொருட்டு சூரபது மனுடன் செய்த பெரும் போரும்,
வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து,
தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.
தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனியவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,
அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும்,
இதற்கு தணிகை என்று பெயர் அமைந்தது.