ஆன்மிக களஞ்சியம்

திருவானைக்காவல் கோவில் எழுந்த வரலாறு

Published On 2024-04-08 10:41 GMT   |   Update On 2024-04-08 10:41 GMT
  • சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்ததை நக்கீர தேவநாயனார், “சீர்மலிந்த சிலந்திக் கினைரசளித்து” என்று கூறுகின்றார்.
  • சிவபெருமானைப் பூசித்து வந்த அந்த யானை கயிலை சென்றது.

ஆனை உலாவிய சோலையில் ஒரு நாவல் மரத்தின் அடியில் தோன்றிய லிங்கத்தை யானை ஒன்று துதிக்கையால் நீர் கொணர்ந்து திருமஞ்சனம் மாட்டி மலர்க் கொய்து அன்றாடம் பூசித்து வந்தது.

அதே லிங்கத்திற்கு சிலந்தி ஒன்று தன் வாய்நீரினால் மேற்கட்டி அமைத்து அதன்மீது சருகுகள் விழாமல் காத்து வந்தது.

அன்றாடம் பூசித்து வந்த யானையோ சிலந்தி வலையைச்சிதைத்துச் சுத்தம் செய்து வந்தது.

சிலந்தி மீண்டும் வலை கட்டிக் காத்தது.

யானை மீண்டும் அதனைச்சிதைத்துப் பூசித்து வந்தது.

இவ்வாறு அன்றாடம் நிகழவே சிலந்தி சினம்கொண்டு யானையின் துதிக்கையில் புகுந்து அதைக் கடிக்கவே யானை வீழ்ந்து இறந்தது.

சிவபெருமானைப் பூசித்து வந்த அந்த யானை கயிலை சென்றது.

ஆனால் சிலந்தியோ கோச்செங்கோட் சோழன் என்ற அரசனாகப் பிறந்து திருவானைக்கா திருக் கோவிலை அமைத்ததாகக் கூறுவர்.

சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்ததை நக்கீர தேவநாயனார்,

"சீர்மலிந்த சிலந்திக் கினைரசளித்து" என்று கூறுகின்றார்.

கோச்செங்கோட் சோழன், தான் முன்னம் திருவருள் பெற்ற திருவானைக்காவில் திருக்கோவில் எடுத்ததை சேக்கிழார்,

ஆனைக்காவில் தாம் முன்னம்

அருள்பெற்றதனை அறிந் தாங்கு

மானைத் தரித்ததிருக் கரத்தார்

மகிழும் கோயில் செய்கின்றார்,

எனப் பாடுகின்றார்.

Tags:    

Similar News