ஆன்மிக களஞ்சியம்

திருவாரிக்கரை மறைந்து ராமகிரி ஆன வரலாறு

Published On 2024-06-02 08:18 GMT   |   Update On 2024-06-02 08:18 GMT
  • ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.
  • அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.

ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.

அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.

தனது பத்தினி ஸ்ரீகாளிகா தேவியுடனும் எதிரில் நாய் வாகனத்துடனும், ஐந்து கோஷ்ட மூர்த்திகள் உள்ள பிரத்யேகமான கர்ப்ப கிரகத்தில் சூலம், உடுக்கை, கத்தி, தண்டம், முறையாக வலது நான்கு கரங்களிலும், அங்குசம், பாசம், மணி, கபாலம் முதலியவற்றை இடது நான்கு கரங்களிலும் தரித்து நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

சூரியன், சந்திரன், கங்கை உள்ள ஜடாமுனியுடன் கோரைப்பற்கள் உடைய முகத்துடனும், தென்திசை நோக்கி எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீகால பைரவ மூர்த்தி.

பெயர் மாற்றம்

ராமகிரி ஊரை ஆதி காலத்தில் "திருக்காரிக்கரை" என்று அழைத்தனர்.

ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணமாக "ராம்" என்ற நாமமும், ஆஞ்சநேயர் சாபத்தால் மடுகு மறைந்து "கிரி" (மலை) ஏற்பட்டதால் கிரி என்ற பதமும் சேர்த்து அன்று முதல் திருக்காரிக்கரை கிராமத்திற்கு ராமகிரி என்ற புனிதப் பெயர் உண்டாயிற்று.

காலமாற்றத்தால் திருக்காரிக்கரை என்ற பெயர் மறைந்து ராமகிரி என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது.

Tags:    

Similar News