ஆன்மிக களஞ்சியம்
- இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்” எனப்படுகிறது.
- நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
திருவாரூர் கோவில்-நாகநாதர் சன்னதி
லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள்.
எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்" எனப்படுகிறது.
பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.
குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது.
நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.
ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.
இதை "நித்திய பிரதோஷம்" என்பார்கள்.
இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.
எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.