ஆன்மிக களஞ்சியம்

திருவதிகை புராண வரலாறு

Published On 2024-01-05 12:38 GMT   |   Update On 2024-01-05 12:38 GMT
  • வீரட்ட தலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆலயம் திருவதிகை
  • ஒரே சமயத்தில் தேவர்களின் ஆவணத்தையும் அசுரர்களின் அட்டகாசத்தையும் அடக்கினார் ஈசன்.

இந்த வீரட்ட தலங்களில் திருவதிகை தலம் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம்.

வீரட்ட தலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திருவதிகை ஆலய புராண வரலாறு வித்தியாசமானது...

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.

அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர்.

அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார்.

சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார்.

அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.

தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை.

அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.

உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர்.

தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.

ஒரே சமயத்தில் தேவர்களின் ஆவணத்தையும் அசுரர்களின் அட்டகாசத்தையும் அடக்கினார் ஈசன்.

பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார்.

மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News