ஆன்மிக களஞ்சியம்

திருவேற்காடு கோவில் அமைப்பு

Published On 2023-12-02 12:40 GMT   |   Update On 2023-12-02 12:40 GMT
  • கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் காட்சி தருகிறார்கள்.
  • மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் வெள்ளிக் கவசங்கள் துலங்கக் காட்சி தருகிறார்கள்.

காவலுக்கு துவார பாலகிகள்.

அர்த்த மண்டபச் சுற்றுச்சுவரில் கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, சதுர்முகி, சாமூண்டீஸ்வரி.

முதல் பிராகாரத்தில் லக்ஷ்மி, பாலவிநாயகர், ஏகாம்பரேசுவரர் - காமாட்சி, முருகன் - வள்ளி - தெய்வானை, சரஸ்வதி.

இரண்டாவது பிராகாரத்தில் உற்சவ நாயகி. அடுத்திருக்கும் சந்நிதியில் வேல்கண்ணி அம்மன்.

அடுத்து, தமிழில் துதித்த குறுமுனி அகத்தியனுக்கோர் சந்நிதி. அதையடுத்து உற்சவ ஆறுமுகன்.

வடகிழக்கு மூலையில் வேங்கடாசலபதிக்கென ஒரு சிறுகோவில்.

மகாலக்ஷ்மி தாயாரும் கருடாழ்வாரும் காட்சி தரும் இந்தக் கோவிலில் உற்சவமூர்த்திகளாக,

ஸ்ரீனிவாசப்பொருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமானுஜர், சக்கரத்தாழ்வார்.

பின்னும் ராம, லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேயன், ஆண்டாள்.

அந்தக் கோவிலுக்கு வெளியே அரசமரத்தடியில் வலம்புரி விநாயகர்.

தென்கிழக்கில் நவக்கிரகங்களுக்கென ஒரு சந்நிதி.

மூன்றாம் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு ஒரு தனிக்கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு ஒரு தனிக் கோவில்.

கல்வி நல்கும் நீலா சரஸ்வதி எனும் அன்னையை மடியில் தாங்கும் உச்சிஷ்ட கணபதிக்கென ஒரு கோவில்.

பிரத்தியங்கரா தேவிக்கென பிறிதோர் கோவில். சப்தமாதர்கள், சுப்ரமணியர், பைரவர்.

மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

உக்கிர காளியாக இருந்த கருமாரியின் ஆலயத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து அன்னையின் உக்கிரம் தணித்திருக்கிறார்.

உமாபார்வதிக்கான மந்திரங்களை உச்சரித்து சாந்த சொரூபீயாக்கியிருக்கிறார்.

இன்னும் அன்னை உமையவளுக்கான மந்திரங்களால் உபாசிக்கப்படுகிறாள்.

Tags:    

Similar News