ஆன்மிக களஞ்சியம்

திருவோடு மரம்

Published On 2023-11-26 13:01 GMT   |   Update On 2023-11-26 13:01 GMT
  • துறவிகள், சாமியார்கள், சன்னியாசிகளின் கைகளில் ‘திருவோடு’ பார்த்து இருப்பீர்கள்.
  • ஞாயிறு கோவிலில் திருவோடு மரம் வளர்க்கிறார்கள்.

துறவிகள், சாமியார்கள், சன்னியாசிகளின் கைகளில் 'திருவோடு' பார்த்து இருப்பீர்கள்.

இந்த திருவோடுகள் ஒரு மரத்தில் இருந்து கிடைக்கிறது.

சிறு காயாக வந்து, தேங்காயை விட பெரிய காயாகி பிறகு திருவோடு போன்று அந்த காய் மாறி விடுகிறது. இதனால் இந்த மரத்துக்கு திருவோடு மரம் என்று பெயர்.

திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமா காளியம்மன் ஆலயத்தில் திருவோடு மரம் தல விருட்சமாக உள்ளது.

வேறு எங்கும் இந்த மரத்தை வளர்க்க மாட்டார்கள்.

ஆனால் ஞாயிறு கோவிலில் திருவோடு மரம் வளர்க்கிறார்கள்.

ஆலய ராஜகோபுரம் அருகே சங்கிலி நாச்சியார் சன்னதிக்கு பக்கத்தில் இந்த மரம் உள்ளது.

தற்போது அந்த திருவோடு மரத்தில் 10க்கும் மேற்பட்ட காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.

பச்சை நிறத்தில் காணப்படும் அந்த திருவோடு காய்கள் விளைந்து முற்றியதும் தெரிந்துவிடும்.

சில சமயம் விளைச்சல் முற்றி திருவோடு காய்கள் கீழே விழுந்து விடுவதுண்டு.

அதை எடுத்து சரி பாதியாக வெட்டினால் 2 திருவோடுகள் கிடைத்து விடும்.

பச்சையாக இருக்கும் திருவோடு காய்ந்ததும் நன்கு கெட்டியாகிவிடும்.

அதைத்தான் யாசகம் பெற சன்னியாசிகள் பயன்படுத்துகிறார்கள்.

ஞாயிறு திருத்தலத்தில் விளையும் இந்த திருவோடுகளை இலவசமாக சன்னியாசிகளுக்கு கொடுத்து விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News