திருவொற்றியூர் ஆலயம்-கோவில் சிறப்புகள்
- பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
- ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.
திருவொற்றியூர் ஆலயம்-பூவுலக சிவலோகம்
படை வளம் செறிந்த பாடல் 274 திருக்கோவில்களில் தொண்டை நாட்டில் 32 திருத்தலங்கள் உள்ளன.
அதில் பெரும் புகழ்பெற்று, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.
பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.
ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.
மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.
கோவிலில் நுழைந்ததும் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காண்கிறோம்.
இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் சிறப்புற நடப்பதால் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.
இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.
உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.