- இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
- வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும்.
கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
இந்த மரம் எந்த வித இடையூறும் இல்லாமல் மேலோங்கி வளர்ந்து செல்லும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
வன்னி இலைகள் விநாயகருக்கும், முருகனுக்கும், சிவபூஜைக்கும், சனீஸ்வரருக்கும் உகந்த பச்சிலைகள் ஆகும்.
வன்னி மருத்துவ பயன்மிக்க ஒரு சிறந்த மூலிகையும் ஆகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் இருப்பதைத்தான் பார்க்க முடியும்.
இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும்.
நினைத்தாலும், கைகூப்பி தொழுதாலும், வலம் வந்தாலும் நம் பாவங்கள் விலகும் என விநாயகர் புராணம் சொல்கிறது.
வன்னி மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் இருந்து வந்தார் என்றும், அந்த மரத்தில் முனீஸ்வரர் குடி கொண்டுள்ளார் எனவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
வன்னி மரத்தை வாரம்தோறும் சுற்றி வந்தால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
எல்லா பிணிகளையும் போக்கவல்ல மூலிகையாக திகழும் வன்னியை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா துயரங்களும் விலகி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.