ஆன்மிக களஞ்சியம்

உலக கட்டிடக்கலை அறிஞர்கள் வியக்கும் சிகரம்

Published On 2024-02-05 11:12 GMT   |   Update On 2024-02-05 11:12 GMT
  • கிரீளத்தோடு சிகரம் அமைந்துள்ள 8.7 மீ. சதுரத் தளம் ஒரே கல்லால் ஆனது அல்ல.
  • ஒரே கல்லால் அமையாவிட்டாலும் இச்சிகரமானது வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.

கிரீளத்தோடு சிகரம் அமைந்துள்ள 8.7 மீ. சதுரத் தளம் ஒரே கல்லால் ஆனது அல்ல.

இது பிரம்மந்திரக் கல்லும் அல்ல.

இது 80 டன் எடை உடையது என்பதும், அழகி என்ற கிழவி கொடுத்தது என்ற கதையும் கற்பனையே என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள்.

ஸ்தூபி வரை மேலே சென்று எல்லாப் பகுதிகளையும் ஆராய்ந்து அளந்த போது இருக்கட்டுமானம் முழுவதும் பல துண்டு கற்களால் ஆனது என்பது உறுதியாகத் தெரிந்தது.

ஒரே கல்லால் அமையாவிட்டாலும் இச்சிகரமானது வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள நேர்த்தியான படைப்பும்

உலகக் கட்டிடக்கலை அறிஞர்கள் அனைவரையும் வியக்கும் ஒப்பற்ற படைப்பும் ஆகும் என்பது திண்ணம் என்று

குடவாயில் பாலசசுப்பிரமணியம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கிரீவப் பகுதியில் வடமேற்கு மூலையில் 153 மீ. உயரத்தில் நிற்கும் பூதகணம் ஒன்று மிகச்சிறப்பாக வடிக்கப் பெற்று காணப்பெறுகின்றது.

இப்பூதம் சிரத்தைத் தாங்கி நிற்பது போன்று இருப்பினும், சிரத்திலிருந்து ஒரு துளை இடப்பட்டு அது பூதத்தின் உடல் வரை அமைந்துள்ளது.

இத் துவாரத்தில் முன்னாளில் மரக்கழியைச் சொருகி ரிஷபக் கொடியைப் பறக்க விட்டுள்ளார்.

வட நாட்டுக் கோவில்களில் கலசத்திற்கு அருகே கொடி பறப்பது போன்று இங்கும் செய்துள்ளனர்.

கோபுரத்தின் 13 ஆவணங்களிலும் உள்ள சாலைகள், கூடுகள் ஆகியவையும் மையப் பகுதியில் உள்ள தெய்வத் திரு உருவங்களும் அழகாகச் கண்ணச் சுதையால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றன.

கீழ்த் திசையில் சிவபெருமானும் உமையும் தேவர்களுடன் திகழும் கயிலை காட்சி காட்டப்பட்டுள்ளது.

பின்னணியில் கயிலைமலை போன்ற காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் உட்கூடு லிங்கத்தின் உச்சியில் இருந்து கலசத்தின் பீடபம் வரை தொடர்கிறது.

இவ்வமைப்பே தஞ்சைக் கோவிலின் தனிச்சிறப்பாகும்.

குஞ்சரமல்லனாகிய ராஜராஜப் பெருந்தச்சன் என்பவனின் மகத்தான பெருஞ்சாதனையான இக்கட்டுமானம் வெறும் கட்டிடக் கலையை மட்டும் காட்டவில்லை.

மாறாக சைவ மெய்ப் பொருளாகிய சிவதத்துவத்தின் வெளிப்பாடே இக்கட்டிட அமைப்பாகும்.

Tags:    

Similar News