- காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து ‘ராம கிருஷ்ண’ அம்சத்துடன் விளங்குகிறார்.
- அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றனவாம்.
கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீதேவராஜர்.
இவருக்கு தேவ பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், பேரருளாளன், தேவாதிராஜன், யக்ஞோத் பவர், கஜேந்திர வரதர், தேவராஜ ஸ்வாமி, மாணிக்க வரதன், பிரணதார்த்திஹரன் ஆகிய வேறு நாமங்களும் உண்டு.
திருவேங்கடத்தான்-ஸ்ரீகிருஷ்ணாம்சம் கொண்டவர். ஸ்ரீரங்கநாதர்- ஸ்ரீராமர் அம்சம் கொண்டவர்.
காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து 'ராம கிருஷ்ண' அம்சத்துடன் விளங்குகிறார்.
சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மதேவன் இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.
இதையடுத்த 14 நாட்கள் மாலைக் கதிரவனின் கிரணங்கள் மூலவரின் திருப்பாதங்களைத் தழுவுமாறு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
உண்மை வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகரது, 'அடைக்கலப் பத்து' என்ற பாசுரங்களை வெள்ளிப் பதக்கங்களில் பொறித்து ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர்.
தவிர, திருவத்தியூரன் மீது அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச் சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் வரதராஜ ந்யாஸ தசகம் உட்பட இன்னும் பல நூல்களையும் இயற்றியுள்ளார் வேதாந்த தேசிகர்.
எம்பெருமானை சேவிக்க உகந்த வேளை, உஷத் காலம் என்பர்.
அப்போது, 'திருப்பள்ளியெழும் பெருமாளின் கழுத்தில், பெருந்தேவி தாயார், வரதரை இறுக அணைத்து சயனித்திருந்ததால் பதிந்திருக்கும் பொன் வளையல்களின் தழும்புகள் காணப்படுமாம்.
இதனால் மலர்ச்சியுடன் திகழும் பெருமாளை இந்த வேளையில் தரிசிப்பது, மகத்தானது!' என்கிறார் வேதாந்த தேசிகர்.