ஆன்மிக களஞ்சியம்

உயிரோட்டத்துடன் காணப்படும் கலைச்சிற்பம்

Published On 2024-06-06 11:37 GMT   |   Update On 2024-06-06 11:37 GMT
  • அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகு
  • கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.

கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.

ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவிலில் ஓங்கி உயர்ந்த ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் காட்சியளிக்கின்றது.

அதில் முழுவதும் முருகனின் புராணங்களை விளக்கும் பல்வேறு கதைச்சிற்பங்கள், உயிரோட்டத்துடன் நிறைந்து, காண்போரைக் கவருகின்றது.

தட்சனுக்குத் தாட்சாயணி மகளாகப் பிறந்த வரலாறு, முருகனின் அவதாரம், நலவீரர்கள் தோற்றம், சூரானாதியர் வேள்விசெய்தல் மற்றும் வரம்பெறுதல், வீரவாகு தூது மற்றும் போர், தேவர்கள் முறையீடு, தெற்குப்புறத்தில் தட்சணாமூர்த்தி, மேற்குப்புறத்தில் தாருக சிங்கமுக சம்ஹாரம், வடக்குத்திசையில் சூரசம்ஹாரம், மாமரம், மயில் மீது அமர்ந்து சேவல்கொடியேந்திய பெருமானின் அற்புத தரிசகம் முதலான சிற்பங்கள் உயிரோட்டத்துடன் அமைந்துள்ளதைக் காணலாம்.

அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகும்.

இது சூட்சும லிங்கம் என வழங்கப்படுகிறது. அதனையடுத்து பலிபீடம் உள்ளது.

அதற்கடுத்து மயூரதேவரின் சன்னதி உள்ளது.

உயிர்கள் ஆணவமலத்தை விட்டொழித்தால் இறைவனின் திருவடியை அடையலாம் என்பதை அது உணர்த்துகின்றது.

Tags:    

Similar News