ஆன்மிக களஞ்சியம்
வளர்பிறை அஷ்டமி மகாலட்சுமி விரதம்!
- தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்
- நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது.
ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து,
சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும்.
தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.