ஆன்மிக களஞ்சியம்

வராஹமூர்த்தி பூமி தேவியை மடியில் அமர்த்தி காட்சியளிக்கும் கோவில்

Published On 2024-07-01 12:15 GMT   |   Update On 2024-07-01 12:15 GMT
  • பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
  • இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.

சக்ரபாணி திருக்கோவிலுக்கு தென்மேற்கில் அமைந்த இந்த திருக்கோவில், மற்ற கோவில்களை விட வித்தியாசமானது.

இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.

முன்னொரு சமயம் "இரண்யாட்சன்" என்ற ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டான்.

இதனால் பெரிதும் கலக்கமுற்ற வானவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று, நடந்ததை சொல்லி, பூமாதேவியை அந்த அசுரனிடமிருந்து காக்கும்படி வேண்டினார்கள்.

அந்த அசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட பூமியைக் கொண்டு வர திருமால் வராக அவதாரம் எடுத்தார். பாதாளம் புகுந்தார்.

அந்த இரண்யாட்சனுடன் கடுமையாக போர்புரிந்து தனது ஒரு கொம்பினால் அவனையும் அவனை சார்ந்த அசுரர் கூட்டத்தையும் அழித்தார்.

அசுரர்கள் கொல்லப்பட்ட பின்பு வராகமூர்த்தி, தனது இன்னொரு கொம்பினால் பூமியை பாதாள உலகத்திலிருந்து தாங்கி, மீட்டுக்கொண்டு மேலே வந்தார்.

பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.

இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.

திருமாலை சரண் அடைந்தால் நாம் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்பதற்கு அடையாளமாக விளங்குவதுதான் குடந்தையில் உள்ள இந்த ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்.

Tags:    

Similar News