- ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது.
- அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.
ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது. அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.
பழனி, வைத்தீஸ்வரன் கோயில், திருச்சிறுகுடி ஆகிய முருகன் தலங்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டதாகும்.
சென்னையில் புராண பெருமையுடன் கூடிய குன்றத்தூர் குமரன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம்,
கபாலி கோவிலில் உள்ள முருகன் சன்னதி, வடபழனி முருகன் கோவில், பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன்
கோவில் மற்றும் பெசன்ட் நகரில் கட்டப்பட்டுள்ள அறுபடைவீடு ஆலயம், வில்லிவாக்கத்தில் உள்ள
அகத்தீஸ்வரர் ஆலயம் அனைத்தும் செவ்வாய் கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரமும்,
தரிசனமும் செய்ய ஏற்ற ஆலயங்கள் ஆகும்.
1. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.
2. 9, 18, 27ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும்.
3. ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.
4. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.