ஆன்மிக களஞ்சியம்

வீரபத்திரர்-அபிஷேக பலன்கள்

Published On 2023-09-05 11:21 GMT   |   Update On 2023-09-05 11:21 GMT
  • நீர் நற்பேறுகளைக் கொடுக்கும்.
  • பால் ஆயுளை வளர்க்கும்.

வீரபத்திரர்-அபிஷேக பலன்கள்

நீர் & நற்பேறுகளைக் கொடுக்கும்.

பால் & ஆயுளை வளர்க்கும்.

தேன் & இன்பம் அளிக்கும்.

பழங்காநத்தம் கணேச அக்னி வீரபத்திரசாமி கோவிலில் நீர், பால், தயிர் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.

மதுரை நாடார் தேசாரி சந்து அங்காள பரமேசுவரி ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு தினமும் நீர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், நெய், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், நறுமணப்பொடி ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்கின்றனர்.

இவர் பேராற்றல் படைத்தவர் என்பதால் குங்குமப்பூ கலந்த தண்ணீரால் திருமஞ்சனம் செய்கின்றனர்.

திருமஞ்சனம் செய்தவுடன் மிக மிக தூய்மையாக வேண்டும் என்பதற்காகப் பச்சைக் கற்பூரம் சார்த்துகின்றனர்.

மதுரை ஸ்ரீ வீரபத்திரசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு வெள்ளிக் கிழமைகளிலும், கார்திகைப் பவுர்ணமியன்றும் அனைத்து வகையான திருமஞ்சனப் பொருட்களாலும் திருமஞ்சனம் செய்கின்றனர்.

திண்டுக்கல் கத்தரிக்காய் சித்தர் கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு, நீர், பால், திருநீறு, பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.

திருக்குளம்பூர் கருப்பண்ணசுவாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு சிறப்பு நாட்களில் திருமஞ்சனத்திற்குரிய அனைத்து வகையானப் பொருட்களாலும் திருமஞ்சனம் செய்கின்றனர்.

மேலமரத்தோணி வீரபத்திரர் கோவிலில் எளிதாக கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.

பழனி காந்திரோடு வீரபத்திரர் கோவிலில் வாரம் ஒரு முறை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News