ஆன்மிக களஞ்சியம்

வீரபத்திரருக்கு சந்தனப்பொட்டு

Published On 2023-09-05 11:27 GMT   |   Update On 2023-09-05 11:27 GMT
  • ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.
  • ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.

வீரபத்திரருக்கு சந்தனப்பொட்டு

வீரபத்திரருக்குப் பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் சந்தனத்தைக் குழைத்துப் பொட்டு வைப்பார்கள்.

அபிஷேகம் முடிந்தவுடன் மூச்சினை அடக்கி, சந்தனம் அரைத்து சுவாமியின் நெற்றியில் இடுதல் வேண்டும்.

ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.

ஸ்ரீ வீரபத்ர மாகாளிக்கு மார்பு, நெற்றி, கன்னம், தோள், நாடி, உச்சி, கை, பாதங்களில் சந்தனப் பொட்டிடலாம்.

ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.

கணு மரம் என்பது 40&50 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரமாகும்.

ஸ்ரீவீரபத்திரர் பிரதான மூர்த்தியாகவோ உற்சவ மூர்த்தியாகவோ இருந்தால், "கனகப்பட்டை" எனப்படும் 70&80 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரக் கட்டைகளிலிருந்து அரைக்கப்படும் சந்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சந்தனம் அரைக்கும் போதோ சுவாமிக்குப் பொட்டிடும் போதோ சந்தனத்தின் மீதும் சுவாமியின் மீதும் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

அதே போன்று ஸ்ரீவீரபத்திரரின் மார்பில் வைத்த சந்தனப் பொட்டு மீது எந்த காரணம் கொண்டும் குங்குமம் வைக்கக்கூடாது.

Tags:    

Similar News