வெளிநாட்டவரையும் கவர்ந்த ஆஞ்சநேயர்
- ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி சனி, ராகு, கேது துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
- வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த திருத்தலமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது.
நாமக்கல் என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது ஆஞ்சநேயர் திருவுருவமாகும்.
அத்தகைய சிறப்பு பெற்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்.
நாமக்கல், செந்தமிழ்க் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊர்,
சிறந்த குடவரைக் கோவில் மும்மூர்த்திகளும் வழிபட்ட புண்ணியத்தலம்,
வாமன அவதாரச் சிறப்பு, சங்கர நாராயணர் சிறப்பு,
அருள் தரும் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு செய்தல் ஆகியவை சிறப்பாகும்.
நாமகிரி தாயார் கணிதமேதை ராமானுஜருக்கு கனவில் தோன்றி கணிதத்தை எளிதாக்கிய திருத்தலம்.
நாமகிரி குன்றில் நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயரால் பிரதிஷ்டை செய்யப் பெற்ற சிறப்புக்குரியது.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி சனி, ராகு, கேது துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த திருத்தலமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது.
இந்த கோவிலின் பெருமைகளை அறிந்து ஏராளமான வெளிநாட்டினர் இங்கு வருகை தருகிறார்கள்.