ஆன்மிக களஞ்சியம்

வெற்றி தரும் வீரலட்சுமி

Published On 2023-09-22 13:08 GMT   |   Update On 2023-09-22 13:08 GMT
  • இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.
  • நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.

கோலாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடியவள் வீரலட்சுமி.

இவள், சிம்மத்தின் மீது ஆரோகணித்து வில், வாள், அம்பு, கேடயம் ஏந்தி வருபவள் என்றும் நான்கு கரத்துடன் விளங்குபவள் என்றும் ஒரு தியானம் கூறுகிறது.

வீரத்தால் விளைவது வெற்றியாகும்.

வெற்றியை நல்கும் வீரலட்சுமி, வெற்றித் திருமகள், ஜெயலட்சுமி எனப்படுகிறாள்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் ஓம் க்ரோம் ப்ரோம் க்ரௌம் ஜ்ரௌம் ச்ரௌம் ஜ்ரௌம் ஸ்வாஹா என்று கூறி

புஷ்பங்களை திருவிளக்கின் பாதத்தில் போட்டு பூஜிக்க வேண்டும்.

அல்லது லலிதா திரிசதீ நாமா வளியில் 61 முதல் 80 வரையிலான நாமாளவளிகளைச் சொல்லி

குங்குமத்தினாலோ, சிவப்பு புஷ்பங்களாலோ, மல்லிகையாலோ அர்ச்சனை செய்யலாம்.

நைவேத்யம் காய்ச்சிய பசும்பால் மற்றும் அக்கார அடிசில்.

வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, தை மாத மகா சங்கராந்தி, திருவோண நட்சத்திரம்,

நவராத்திரி காலங்களில் விசேஷமாக பூஜித்தல் நன்று.

இவளை வழிபட்டால் முயற்சி தானாகவே வரும். வீரம் வரும். வீரத்தோடு விவேகமும் வரும்.

பெருவீரர்களும், இவளை உபாசிக்கும் வீரரிடம் சரணடைவர். நீதிமன்ற வழக்கிலும் வெறறியடையச் செய்பவள் இவளே.

Tags:    

Similar News