ஆன்மிக களஞ்சியம்

வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?

Published On 2024-07-02 11:21 GMT   |   Update On 2024-07-02 11:21 GMT
  • ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.
  • இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம், எனவே தான் இறைவழிபாடு வெற்றிலை இல்லாமல் முழுமை அடையாது என்பார்கள்.

வெற்றிலையை நாம் எப்போதும் வெற்றி தரும் இலையாக பார்க்க வேண்டும்.

மேலும் வெற்றிலையை உரிய முறையில் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

வெற்றிலையை நம் முன்னோர்கள் நமது உடலுடன் ஒப்பிட்டனர்.

இதை உணர்த்த பூஜைகளில் நம் முன்னோர்கள் வெற்றிலை வைப்பதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தனர்.

ஸ்தூல உடல், சூட்சம உடல் இரண்டையும் குறிக்க பூஜைகளில் 2 வெற்றிலை வைப்பது வழக்கம்.

அது போல ஸ்தூல உடல், சூட்சம உடல், காரண உடல் மூன்றையும் குறிக்க மூன்று வெற்றிலை வைத்து வழிபட்டனர்.

நோய் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே வெற்றிலை வைப்பதன் குறிக்கோளாகும்.

பாக்கு என்பது செல்வத்தை குறிக்கும். வாழைப்பழம் என்பது பிறப்பற்ற நிலையை குறிக்கும் பொதுவாக பழம் சாப்பிட்டு நாம் வீசி எறியும் கொட்டையில் இருந்து புதிய செடி முளைக்கும்.

ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.

இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.

அதை இறைவனிடம் வேண்டவே மறுபிறவி இல்லாத வாழைப்பழத்தை பூஜையில் வைக்கிறோம்.

உலகம் முழுவதும் இறை வழிபாட்டில் வாழைப்பழம் முக்கிய இடம் பிடித்து இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபடுவதை நாம் செய்யும் நல்வினை, தீவினை இரண்டையும் குறிக்கும்.

ஆக தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய நான்கையும் வைப்பதன் தத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

வாழ்வில் ஒருவருக்கு அறிவு, ஆரோக்கியம், செல்வம், பிறப்பற்ற நிலை ஆகிய நான்கும் முக்கியம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகிய நான்கும் அவற்றை தருகின்றன.

Tags:    

Similar News