ஆன்மிக களஞ்சியம்

விலங்கு தறித்த விநாயகர்

Published On 2023-12-23 12:09 GMT   |   Update On 2023-12-23 12:09 GMT
  • இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர்.
  • சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர்.

இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர்.

துறவி பூண்ட பட்டினத்தடிகள் தம் சொத்துக்களை ஊரார் எடுத்துச் செல்லும்படி நிதியறையைத் திறந்துவிடுமாறு தம் கணக்கர் சேந்தனாருக்கு ஆணையிட்டார்.

அதன்படிச் செய்த சேந்தனாரை, இழந்த பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கூறி, அரசன் விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தான்.

சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர்.

பட்டினத்தடிகள் வெண்காட்டு இறைவனிடம்,

"மத்தளைத் தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்

நித்தமும் தேடிக்காணா நிமலனே யமலமுர்த்தி

செய்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட

கைத்தளை நீக்கியென் முன் காட்டு வெண் காட்டுளானே"

என வேண்டினார்.

சிவபெருமான் கட்டளைப்படி விநாயகர் சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து) அவரைச் சிறையினின்று விடுவித்தார்.

அதனால் விலங்கு தறித்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார்.

இன்றும் பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காகத் திருவெண்காட்டிற்கு எழுந்தருளும்போது விலங்கு தறித்த விநாயகரை வந்து வணங்கிச் செல்லுகிற விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

Tags:    

Similar News