ஆன்மிக களஞ்சியம்

வில்வ இலை மகிமை

Published On 2024-01-31 09:44 GMT   |   Update On 2024-01-31 09:44 GMT
  • கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
  • தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெருந்தனத்தை அடைவான்.

கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கலாகாது.

வில்வத்திற்கு பழைமை தோஷம் கிடையாது.

முதல் நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் பூஜை செய்யலாம்.

ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.

தாமிரப் பாத்திரத்தில் புஷ்பம், சந்தனம் வைக்கக் கூடாது.

தாமரை, கொன்றை, தும்பை, அத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அருகு, கருஊமத்தை ஏற்றவை.

தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெருந்தனத்தை அடைவான்.

நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

ஊமத்தை விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ப்ருங்கராஜ பத்திரம் உபயோகிக்கலாம்.

வெள்ளை நிறப் புஷ்பங்கள் சிலாக்கியமானவை. வில்வம், தாமரை காய்ந்திருந்ததாலும் உபயோகிக்கலாம்.

தாமரை, பகுளம், சம்பகம், பாடலி, புன்னாகம், மல்லிகை, கரவீரம், கல்காரம் சிரேஷ்டம் என்று சொல்லப்படுகிறது.

கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர்.

வில்வ மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமம்.

இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணத்தால் மகாதேஷங்களும் நீங்கி, சகல சேமங்களும் உண்டாகும்.

வில்வார்ச்சனை பண்ணும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும்.

அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்பட இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு விசேஷம்.

Tags:    

Similar News