- ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.
- அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.
ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.
அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.
உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.
பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.
விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.
நினைத்ததை எல்லாம் தரவல்லது.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை
விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.
விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.
அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.
சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.
ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.
சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.