ஆன்மிக களஞ்சியம்

விருத்தாசலம் பழமலை நாதர் மணிமுத்தாறு தீர்த்தம்!

Published On 2023-08-26 12:56 GMT   |   Update On 2023-08-26 12:56 GMT
  • இத்தலத்து இறைவன் பெயர் “விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்” என்பதாகும்.
  • இத்தலத்து விநாயகர் “ஆழத்துப்பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார்.

விருத்தாசலம் மணிமுத்தாறு தீர்த்தம்

"திருமுதுகுன்றம்" என அழைக்கப்படும், விருத்தாசலம் "பழமலை நாதர் திருக்கோவிலில்" உள்ளது "மணிமுத்தாறு தீர்த்தம்".

இத்தலத்து இறைவன் பெயர் "விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்" என்பதாகும்.

அம்பாள் பெயர், "விருத்தாம்பிகை, பெரிய நாயகி பாலாம்பிகை" என்பதாகும்.

இத்தலத்து மரம், "வன்னி" ஆகும். இத்தலத்து விநாயகர் "ஆழத்துப்பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார்.

இது ஒரு தேவாரத் தித்தலம். இத்தலத்தை, அருணகிரி நாதர், குரு நமசிவாயர் சிவப்பிரகாசர், வள்ளலார் முதலிய மகான்கள் புகழ்ந்து பாடியுள்ளார்.

இத்தலத்தில் மாசிமகப் பெருவிழாவும், ஆடிப்பூரத் திருக்கல்யாணமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட திருத்தலம், இது. முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூசித்த தலம், இது.

சுந்தரர் இத்தலத்து இறைவனை வேண்டி பொன்னைப் பெற்று, இங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார்.

இத்தலத்திற்கு "விருத்தகாசி" என்ற பெயரும் உண்டு. இத்தலம் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகும்.

இத்திருத்தலத்தின் தீர்த்தமாகிய மணிமுத்தாற்றில், இந்த ஆலயத்தின் வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே உள்ள "வடபால் மணிமுத்தாற்றில்" நீராட வேண்டும்.

இவ்விடமே "புண்ணிய மடு" என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நீராடி, பிள்ளையார், இறைவன், அம்பாளை வழிபட முக்தி நிலை கிட்ட சிறந்தொரு பரிகாரமாகும்.

Tags:    

Similar News