விஷ்ணு பகவானுக்குரிய வைகுண்ட ஏகாதசி விரதம்
- ஏகாதசியில் உபவாசம் இருந்து இரவு விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.
- தசமியிலும், துவாதசியிலும் ஒரே வேளைதான் உண்ண வேண்டும்.
ஓர் ஆண்டில் மொத்தம் இருபத்தைந்து ஏகாதசிகள் வரும்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது. இதுவே வைகுண்ட ஏகாதசி எனப்பெறும் சிறப்புடையதாகும்.
ஏகாதசியில் உபவாசம் இருந்து இரவு விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.
தசமியிலும், துவாதசியிலும் ஒரே வேளைதான் உண்ண வேண்டும்.
ஏகாதசியன்று காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தீர்த்தம், துளசி ஆகியவற்றுடன் அர்ச்சனை செய்த தேங்காய், பழம், பிரசாதங்களை வாங்கி வந்து அவற்றையே உட்கொள்ள வேண்டும்.
அன்று திவ்ய தேசங்களில் திறக்கப்படும் வைகுண்ட வாசலில் சென்று, கருட சேவையை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம்.
அடுத்த நாள் துவாதசியில் காலையில் பச்சரிசி அன்னமும், அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சமைத்து உண்ணலாம்.
மதியம் பலகாரம் சாப்பிடுவார்கள்.
மன்னர்களான அம்பரீஷன், ருக்மாங்கதன் ஆகியோர் ஏகாதசி விரதம் அனுஷ்டித்துப் பலன் அடைந்தவர்கள்.
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம், புகழ், செல்வம், ஆரோக்கியம் முதலியன உண்டாகும்.
வைகுண்டம் கிட்டும்.