ஆன்மிக களஞ்சியம்
- பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று
- வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி
விஷ்ணுபரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி
பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா?
அதில் இரு பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி.
வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி,
சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி,
மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி,பச்சை நிறமுடைய புஷ்டி தேவி,
என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.
இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும்,
கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.