ஆன்மிக களஞ்சியம்

யார் யார் சந்திர பலம் பெற்றவர்கள்?

Published On 2024-03-28 11:45 GMT   |   Update On 2024-03-28 11:45 GMT
  • ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் உச்சம்.
  • இரவு நேரம், தட்சிணாயணம் ஆகிய காலங்களில் பிறந்தவர்களும் சந்திர பலம் பெற்றவர்களாவர்கள்.

முற்பிறவியில் ஒருவன் தன் தாயையும், காதலியையும், மனைவியையும் ஏமாற்றி மோசம் செய்து தவிக்க விட்டவனும்,

இதைப்போல் ஒரு பெண் தன் காதலனையும், கணவனையும் ஏமாற்றி மோசம் செய்தவளும் அடுத்த பிறவியில்

சந்திர பலமிழந்து பிறக்கின்றார்கள்.

ஜாதகத்தில் 3, 6, 8, 12ல் சந்திரன் இருக்க பிறந்தவர்களுக்கும் விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாயிருக்கும் போது பிறந்தவர்களுக்கும் சந்திரபலம் குறைவு.

ரிஷப ராசியில் சந்திரன் இருந்தால் உச்சம்.

கடக ராசியில் சந்திரன் இருந்தால் ஆட்சி, உடன் இராகு, கேது, சனி இருந்தால் பலம் குறைவு.

சந்திரன் சுப பார்வையின்றி சனி வீட்டில் இருந்தாலே, இராகு, கேதுவுடன் கூடியிருந்தாலோ, மறைவிடத்திலிருந்தாலோ அந்த ஜாதகர் சந்திர பலத்தை பெறலாம்.

ஒவ்வொரு ராசியிலும் கடைசி பாதம் அதாவது மேஷ ராசியில் கிருத்திகை 1 ஆம் பாதம், கன்யா ராசியில் சித்திரை 2 ஆம் பாதம்,

தனுசு ராசியில் உத்திராடம் 1 ஆம் பாதமாக இருந்து பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் ஜாதகத்தில்

4 ஆம் இடத்தில் இருந்தால் சந்திர பலம் அதிகமாக இருக்கும்.

1, 2, 5, 7, 9, 10, 11 ஆம் இடங்களில் பாவக் கிரகங்களோடு சேராமல் இருந்தாலும் சந்திர பலம் அதிகம்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளிலும் ஏப்ரல் 21 முதல் மே 20 வரையிலும், ஜூன் 21 முதல் ஜூலை 20 வரையிலும்,

சோமவாரம் என்னும் திங்கள் கிழமைகளிலும், வளர்பிறை, பவுர்ணமி, இரவு நேரம், தட்சிணாயணம் ஆகிய காலங்களில்

பிறந்தவர்களும் சந்திர பலம் பெற்றவர்களாவர்கள்.

Tags:    

Similar News