சோதனையில் சிக்கிய 2023 கே.டி.எம். 390 டியூக்
- கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக 2023 டியூக் 390 இருக்கிறது.
- சர்வதேச சந்தையில் இந்த மாடல் தொடர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் 2023 டியூக் 390 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், வெளிநாடுகளிலும் 2023 கே.டி.எம். டியூக் 390 மாடல் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய மாடல் தற்போதைய டியூக் 390-ஐ விட டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட் கௌல் கூர்மையாக காட்சியளிக்கிறது. ஃபியூவல் டேன்க் மீது பொருத்தப்பட்டு இருக்கும் ஷிரவுட்கள் சற்றே நீண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் உள்ள சப் ஃபிரேம் முற்றிலும் புதிய யூனிட் ஆகும். இதே போன்ற சப் ஃபிரேம் 790/890 டியூக் மாடல்களில் காணப்படுகிறது.
இவை தவிர வீல்கள், பிரேக் டிஸ்க், WP சஸ்பென்ஷன் மற்றும் ஸ்விங் ஆம் உள்ளிட்டவை 2022 கே.டி.எம். RC 390 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் 373சிசி, லிக்விட் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 42.9 பி.ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் புதிய 2023 கே.டி.எம். RC 390 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரத்தில் இருந்து துவங்கும் நிலையில், புதிய டியூக் 390 மாடலின் விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
Photo Courtesy: Bikewale