இரு கார்களின் விலையை திடீரென மாற்றிய ஜீப்
- ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல் கார்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
- விலை மாற்றம் ராங்ளர் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. விலை உயர்வில் ஜீப் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி ஜீப் ராங்ளர் மாடலின் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் வேரியண்ட் விலை முன்பை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் முதல் துவங்குகிறது.
ஜீப் காம்பஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 32 லட்சத்து 22 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய விலை உயர்வை அடுத்து ஜீப் காம்பஸ் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இதே ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜீப் காம்பஸ் விலை முறையே ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.